துதிப் பாடல்கள்

அப்பா உம் கிருபையால்

Appaa Um Kirubaiyaal

அப்பா உம் கிருபையால்

அன்பே உம் இரக்கத்தால்

இன்னும் உயிரோடிருக்கிறேன்

நான் இன்னும் அழியாதிருக்;கிறேன்

பாழும் நிலம்போல பரிதாபமான என்னை

பக்கம் நெருங்கி வந்து பட்சமாய் பார்த்தீர்

(பற்றிக் கொண்டேன் பாதமதை-

முத்தம் செய்வேன் கோடிமுறை-2)

தாயவள் அன்பைக் காட்டி முழங்காலில் தாலாட்டி

தந்தைபோல் அரவணைத்து உம்மிடத்தில் சேர்த்தீர்

(உம்மைப்போல தெய்வமில்லை-

உம்மிடத்தில் மாற்றமில்லை-2)

கண்மூடி படுக்கையில் காலைதோறும் விழிக்கையில்

என்றும் என்னோடிருக்கிறீர்

என்னை உறங்காமல் காத்து நிற்கிறீர்

ஆறு இக்கட்டுக்கும் பொல்லாப்புக்கும் விலக்கி

அடிமை என்னைக்கூட அன்பு கொண்டு காத்தீர்

(உந்தன் அன்பில் மாயமில்லை-

உம்மைப்போல யாருமில்லை-2)

மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்து போகையிலும்

இருளின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்டீர்

(உந்தன் முன்னே தோல்வியில்லை-

உம்மையன்றி தெய்வமில்லை-2)

தண்ணீரைக் கடக்கையில் தள்ளாடி நடக்கையில்

தோளில் தூக்கிச் சுமந்தவரே

தீங்கு நாளில் என்னை மறைத்தவரே

தேவ ராஜ்ஜியத்தில் என்னைக் கொண்டு போய் சேர்க்க

பாவ ராஜ்ஜியத்தில் எனக்காக வந்தவரே

(எனக்காக வந்தவரே-எல்லோருக்கும் பெரியவரே-2)

இயேசு நாமத்திலே என்றும் எங்கும் ஜெயம் எடுக்க

நேசம் வைத்து உம்மை எனக்காக தந்தவரே

(உத்தமரே உம் பாதம்-உண்மையிலே அது போதும்-2)

சத்தியத்தில் வழி நடத்தி நித்தியத்தில் சேர்ப்பதற்கு

நித்தம் புது கிருபை தந்தீர்-தேவ

சித்தம் கொண்டு எனக்குள் வந்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு