துதிப் பாடல்கள்

அப்பா இயேசப்பா எல்லாம்

Appaa Yesappaa Ellaam

லல்லல்லாலல்லா... - 2

லல்லல்லாலல்லா... - 2

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா

உலகை மறந்து உம்மை நோக்கி

உம்மிடத்தில் வந்தேன்

என்னை அனைத்து தினமும் காக்கும்

தெய்வம் நீர் அல்லவோ... - 2

நீரே எந்தன் தேவன்,

நீரே எந்தன் தெய்வம்,

நீரே எந்தன் மேய்ப்பன்,

நீரே எந்தன் மீட்பர்... - 2

என்னோடிருந்து என்னை நடத்தும்

நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ... - 2

நீரே எனது தாயும்,

நீரே எனது தந்தை,

நீரே எனது சொந்தம்,

நீரே எனது சொத்து... - 2

எல்லாமாக என்னோடிருந்து

பாதுகாப்பவர் நீர் அல்லவோ...

நீரே எனது கன்மலை

நீரே எனது கோட்டை

நீரே எனது அடைக்கலம்

நீரே எனது துருகம்... - 2

எல்லா வேளையும் என்னோடிருந்து

பெலன் தருபவர் நீர் அல்லவோ... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு