அந்த பாதாளத்தில் உம்மை துதிப்பவன் யார்
இந்த பூலோகத்தில் உம்மை
நாங்கள் துதிப்போம் - 2
துதிப்போம் துதிப்போம்
துயரம் மறந்து
உம்மை துதிப்போம்
துதிப்போம் துதிப்போம்
கவலை மறந்து
உம்மை துதிப்போம்
1. கர்த்தாவே உமது கரத்தினிலே
எங்களை வரைந்து வைத்து உள்ளீரே - 2
வரைந்த தேவன் மறப்பது இல்லை
எந்த நாளும் கை விடுவது இல்லை - 2
2. கர்த்தாவே உமது சிறகினிலே
எங்களை மூடி மறைத்து உள்ளீரே - 2
மறைத்த தேவன் நேசிக்கின்றீரே 2
ஒவ்வொரு நாளும் போஷிக்கின்றீரே - 2
3. கர்த்தாவே உமது இரக்கத்திலே
எங்களை தொடர்ந்து நடத்துகிறார் - 2
நடத்தி வந்தீர் நன்மைகள் செய்தீர்
உமது நாமம் நாளெல்லாம் சொல்வோம் - 2