அன்புள்ள ஐயாமாரே அருமையான அம்மாமாரே
நல்லசேதி சொல்ல வந்தேன் உங்களுக்கு - 2 -
1. காலையிலே தினத்தந்தி , மாலையிலே மாலைமுரசு
வாரமுழுதும் ராணிகாமிக்ஸ் விதவிதமான க்ரைம் நாவல்ஸ்
இங்கு எதபடிச்சாலும் நெஞ்சுக்கு நிம்மதி இல்லீங்கோ - 2
அத படிச்சிபுட்டாலே மனசுக்கு ரொம்ப தொல்லைங்கோ - 2
தொல்லைங்கோ மிக தொல்லைங்கோ அது தொல்லைங்கோ
இல்லைங்கோ அதில் நெஞ்சுக்கு நிம்மதி இல்லைங்கோ - 2 - அன்புள்ள
2. பார்த்தாலே பசிதீரும் படத்தை பார்த்தா பசிதீருமா
பாவ மன்னிப்பு படம் பார்த்தா உன் பாவத்தை அது மன்னிச்சிடுமா - 2
இங்கு சிகரெட் , சினிமா , சாராயம் , நிம்மதி கொடுக்காது -2
உன் வாழ்க்கையிலிருக்கும் வேதனய அது தடுக்காது -2
கொடுக்காது அது நிம்மதி உனக்கு கொடுக்காது உன்
வாழ்க்கையிலிருக்கும் வேதனையை அது தடுக்காது - அன்புள்ள
3 . கருவினிலே உன்னைக் கண்டவரு - உனக்காய் சிலுவையில் மாண்டவரு
அவர்தான் இயேசு ஆண்டவரு - 2 அவரிடம் வந்து நீ சேரு
இந்த சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு
இல்லாட்டி போனா பின்னாட்டி உனக்கு பேஜாரு
பேஜாரு தம்பி பேஜாரு படா பேஜாரு
சங்கதி கேட்டு திருந்துர வழிய நீ பாரு