துதிப் பாடல்கள்

அன்பின் இயேசுவே

Anbin Yesuvae

அன்பின் இயேசுவே என் அருமை இயேசுவே

பாவியிலும் பாவியை பரிவுடன் இரட்சித்த

துரோகி நான் படு துரோகி நான்

என் நேசர் இயேசுவை ஈனக் கொலை செய்த

துஷ்டன் நான் படு துஷ்டன் நான்

அன்பாம் இயேசுவை அடித்து வதைத்திட்ட

பாவி நான் படு பாவி நான்

பாவியின் நேசரை பாடுபடுத்திய

பாதகன் நான் படு பாதகன் நான்

பரிசுத்த தேவனை பாரச்சிலுவை சுமக்கவைத்த - பாதகன்

சண்டாளன் நான் படு சண்டாளன் நான்

கிறிஸ்து இயேசுவை கோரக் கொலை செய்த - சண்டாளன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு