துதிப் பாடல்கள்

அன்பின் தெய்வம் இயேசு

Anbin Theyvam Yesu

அன்பின் தெய்வம் இயேசு -நம்மை

ஆளவந்த நேவர். இன்பம் இன்பம்

என்று நாம் பாடுவோம் -எங்கள்

இதயத்து ராஜாவாக உயர்த்துவோம்

உயர்த்துவோம் உயர்த்துவோம்

உயர்த்துவோம் ..உயர்த்துவோம்.

1. பாடல் நூறு பாடினாலும்

நம் பரமன் நேசம் குறையாதது

வாஞ்சையோடு நாம் துதித்தாலும்

அவர் வல்லமையின் நேசம் மாறாது -அன்பின் தெய்வம்

2. காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்

நம்நேசன்பு வாசம் வீசிடும்

அவரில் மகிழ்ந்து அனந்திப்போம்

நம் ஆண்டவரின் வார்த்தையில் நிலைத்திருப்போம் -அன்பின் தெய்வம்

3. பாவத்திலே வாழ்ந்து வந்தோமே

பாவச் சேற்றிலே படுத்திருந்தோமே

பரிசுத்தர் அவர் நம்மை நேசித்தார்

பாசமாய் நம்மை அவர் இரட்சித்தார் -அன்பின் தெய்வம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு