துதிப் பாடல்கள்

அன்பின் சமூகமே

Anbin Samoogamae

அன்பின் சமூகமே இறை

அருளின் திருக்கூட்டமே

பேதமில்லாதே கூடுவோம் - அருள்

வேதத்தின் வாக்கிலே வாழுவோம்

அல்லேலூயா பாடி நாம் ஆர்ப்பரிப்போம்

அல்லேலூயா பாடி நாம் மகிழ்ந்திடுவோம்

தந்தை மகன் தூய ஆவியென

இறைவன் உறவுடன் வாழ்கின்றார்

சிந்தையும் செயலும் ஒருங்கிணைந்த

திரித்துவ சமூகத்தைப் போற்றிடுவோம் - 2

அனைவரும் குடும்பமாய் கூடிடுவோம்

ஒருள்ளம் ஒருமனம் கொண்டு வாழ்வோம்

தேவையில் உடமையைப் பகிர்ந்திடுவோம்

சேவையில் தினம் நம்மைத் தந்திடுவோம் - 2

எல்லோர்க்கும் நண்பராய் ஆகிடுவோம்

பொல்லார்க்கும் நன்மையே செய்திடுவோம்

மன்னித்து மறந்தே வாழ்ந்திடுவோம்

மங்காத அன்பிலே மிளிர்ந்திடுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு