அன்பரே அன்பின் இருப்பிடமே
இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே - 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே - 2
1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே
கருவினை நீர் கண்டீரே - 2
சேயாய் கருவினில் நான் இருந்தபோதும்
கருணையாய் என்னை கொண்டீரே - 2
2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும்
எந்தனை சேர்த்துக்கொண்டீர் - 2
உந்தனின் கிருபையை திரும்பவும் தந்து
எந்தனை மகிழச் செய்தீர் - 2
3. எந்தனுக்காகவே தம் ஜீவன் தந்தீர்
என்ன நான் செய்திடுவேன் - 2
எந்தையை உந்தனின் அன்பினை
என்றும் எங்குமே பகிர்ந்திடுவேன் - 2