துதிப் பாடல்கள்

அன்பான இயேசு என்மீது இரங்கி

Anbaana Yesu Enmeedhu Irangi

அன்பான இயேசு என்மீது இரங்கி

மண்மீது வந்தாரே

என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று

மறுவாழ்வு தந்தாரே

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

விடுதலை தந்தாரே... - 2

ஆவியால் என்னை அபிஷேகம் செய்து

அன்போடு அனைத்தாரே... - 2

பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி

புது வாழ்வு தந்தாரே

அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி

ஆசாரியர் என்றாரே... - 2

சொந்தம் ஜனம் என்றாரே... - 2

தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன்

தேடியே வந்தாரே... - 2

திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே

கனி கொடு என்றாரே... - 2

எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம்

வருகையை எதிர் பார்க்கிறேன்... - 2

அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து

தன்னோடு அழைத்து செல்வார்... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு