அன்பான என் தேவா
ஆறுதலின் நாயகா - 2
செய்த நன்மைகள் ஆயிரம் உண்டைய்யா
எதை நான் சொல்வது தெரியலையே - 2
மழையில் மாட்டி தவிக்கும்
பறவையையா - நான்
அடைக்கலமில்லாமல்
அலைந்தே திரிகிறேன் - 2
அதிசயம் செய்திடவே
அடைக்கலம் தந்தீரே - 2
அதை நான் மறப்பேனோ
மறந்தே போவேனோ - 2
புள்ளிமான் நீரோடையை
தேடித்திரிவது போல்
தாகத்தோடு தேடுகிறேன்
தண்ணீரை நானைய்யா
தாகத்தை தீர்த்திடவே - 2
தண்ணீராய் வந்தீரைய்யா
எனக்குள் வாழ்ந்திடவே
நீரே நீரானிரைய்யா - 2
உறவு மறந்ததினால்
உள்ளம் வெறுத்தேன்
இதுதான் உறவு என்று
கண்கள் கலங்கினேன் - 2
நிறைவான வார்த்தைகளால்
உறவாக வந்தாரைய்யா
அதை நான் மறப்பேனோ
மறந்தே போவேனோ - 2