துதிப் பாடல்கள்

அன்பாலே அழகாக

Anbaalae Azhagaaga

அன்பாலே அழகாக உருவான பூமி

நமக்கென்று படைத்தாரே நம் இயேசுவே

புது காலை புது வானம்

புது வாசம் ஒகே ஒகே

புது பாதை புது வாசல்

எல்லாமே டிகே டிகே

வாழ்வே தேவன் வரம்

தங்கும் கிருபையால் கரம்

மலைமீது பணிதூவும் மேகம்

கலைந்தோடும் அழகோவியம்

அலைமோதும் ஓடைகள் யாவும்

சலசலக்கும் சங்கீர்த்தனம்

காண்கின்ற இடமெல்லாம் என்றும் புதுமை

கர்த்தரின் கையெழுத்து என்றும் அருமை

காற்றே பேச சங்கீதமாய்

பூவே ஆடு சந்தோஷமாய்

புது காலை புது வானம்

உலகத்தின் ஒளியான தேவன்

வழிகாட்ட நடப்பேன் ஐயா

சுமையான கவலைகள் எல்லாம்

சுகமாக கடப்பேன் ஐயா

நான் இங்கு புதிதாக பிறந்தேன் ஐயா

நாள்தோறும் இதயத்தை திறந்தேன் ஐயா

வாழ்க்கை யாவும் வளமானது

வாழ்க்கை யாவும் வசமானது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு