துதிப் பாடல்கள்

அநாதி தேவனே என் அடைக்கலம்

Anaadhi Devanae En Adaikkalam

அநாதி தேவனே என் அடைக்கலம்;

அவர் நித்திய புயங்கள் ஆதாரம்;

அவர் எனக்கு முன்னின்று சத்துருவை துரத்தி, -2

என்னை மீட்ட தேவனே என் அடைக்கலம்

1 .நீதிமானின் இரட்சிப்பு

உம்மாலே வந்திடும்

இக்கட்டுக்காலத்தில்

நீரே எந்தன் அடைக்கலம். (சங்கீதம் 37:39)

2. உம் வல்லமையை கண்டு,

நான் காத்திருப்பேன்;

தேவனே எனக்கு

உயர்ந்த அடைக்கலம் (சங்கீதம் 59:9)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு