துதிப் பாடல்கள்

அல்லேலூயா என் ஆத்துமாவே

Alleluya En Aathumaavae

அல்லேலூயா என் ஆத்துமாவே

கர்த்தரை ஸ்தோத்தரி - நான்

உயிரோடிருக்கும் நாளெல்லாம்

கீர்த்தனம் பண்ணுவேன்.

1. சகலமும் படைத்தவர்

சகல அதிகாரம் உடையவர்

சாத்தானை வென்று

சாவினை அழித்தவர்

சர்வ வல்லவர் (2)

2. அற்புதம் செய்பவர் - இந்த

அகிலதை ஆள்பவர்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நம்பினோரை காப்பவர் (2)

3. சீக்கிரம் வருபவர் - பரம

சீயோனில் சேர்ப்பவர்

பாவத்தை வெறுத்து பரிசுத்தம் நாடி

பரலோகம் சேருவேன் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு