துதிப் பாடல்கள்

அளவில்லாத உம் அன்பு தானே

Alavillaadha Um Anbu Thaanae

அளவில்லாத உம் அன்பு தானே

மாறாத உந்தன் கிருபை தானே

இன்னல் வரை என் வாழ்வினை

நடத்தின தயவு தானே

அளவில்லாத உம் அன்பு தானே

மாறாத உந்தன் கிருபை தானே

உமக்கே ஆராதனை – 4

1. இயேசுவின் பாதத்தில்

அமர்ந்திருக்கும் அனைவருக்கும்

இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2

என் வாழ்வினை இந்நாள் வரை – 2

நடத்தின என் தேவன் பெரியவரே – 2

உமக்கே ஆராதனை – 4

2. உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின்

வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2

சத்ருக்கு முன் என் வாழ்க்கையை – 2

அலங்கரிக்க என் தேவன் வல்லவரே 2

உமக்கே ஆராதனை – 4

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு