துதிப் பாடல்கள்

அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்

Alangaaram Arpudham Adhisayam Naangal

அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்

அவர் கரங்களில் கருவிகள் நாங்கள்

தேவ ராஜ்யத்தின் கிரீடங்கள் நாங்கள்

தாயின் கருவில் தெரிந்துக் கொண்டாரே

தினமும் தாங்கி சுமந்தார்

உயிரைப் படைத்த அதிசய தேவன்

வாழ்வை அழகாக்கினார்

ஆசீர்வாதங்கள் ஆயிரமாயிரம்

அளவில்லாமலே இறங்கிடும் இறங்கிடும்

எல்லை முழுவதும் செழிப்பாய் மாற்றுவார் - 2

வெண்கலக் கதவுகளை உடைப்பார் உடைப்பார்

இருப்புத் தாழ்பாளை முறிப்பாரே

உலக பொக்கிஷங்கள் தருவார் தருவார்

செட்டையின் சிறகிலே அணைப்பாரே

ராஜாதி ராஜா இருந்தால்

குறைவே இல்லை

குடும்பத்திலே நிறைந்த வாழ்வு

உலகத்திலே ஒளிமயமாக

உயர்த்தி வைப்பாரே – 2

1. சின்னவன் ஆயிரமும்

எளியவன் மேன்மையுமாய்

சுகமாக தங்குவான் எந்நாளும்

ஆரோக்கியமாகவே தங்குவான்

சின்னவன் ஆயிரமும்

எளியவன் மேன்மையுமாய்

சுகமாக தங்குவான் எந்நாளும்

ஆரோக்கியமாக மாறுவான் - ராஜாதி

2. களங்களும் நிரம்பிடும்

வயல்களும் செழித்திடும்

களஞ்சியம் பெருகும் பெருகுமே

களிப்பாக மாறும் மாறுமே - 2 - ராஜாதி - தாயின்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு