துதிப் பாடல்கள்

அதிகாலை தினம் தேடியே

Adhigaalai Thinam Thediyae

Tamil Christian song lyrics: அதிகாலை தினம் தேடியே (Adhigaalai Thinam Thediyae). பாடல் வரிகள். More songs: அ

அதிகாலை தினம் தேடியே - உம்

முகத்தினில் விழித்திடுவேன்

புதுகிருபை அதை தேடியே - உம்

பாதத்தில் அமர்ந்திடுவேன்

ஆனந்தம் பேரின்பம் - என்

அன்பரின் பாதத்திலே

ராஜா அல்லேலூயா - என்

தேவா அல்லேலூயா

1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து

காலையில் பணிந்திடுவேன்

கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து

மகிமையை செலுத்திடுவேன்

பாதத்திலே முகம் பதித்து

முத்தங்கள் செய்திடுவேன்

ராஜா அல்லேலூயா - என்

தேவா அல்லேலூயா

2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட

கண்களும் விழித்திடுதே

உம்மனம் குளிர என் மனம் பாட

ஆயத்தமாகிடுதே

உம் வசனம் தியானித்திட

உள்ளம் காத்திடுதே

ராஜா அல்லேலூயா - என்

தேவா அல்லேலூயா

3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்

கருத்தாய் நினைத்திடவே

கனிவாய் இரங்கி கருணை ஈந்து

கரத்தால் அணைத்திடுமே

நாள் முழுதும் வல்லமையால்

நிதமும் நனைத்திடுமே

ராஜா அல்லேலூயா - என்

தேவா அல்லேலூயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு