துதிப் பாடல்கள்

ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்

Aayiram Aayiram Thunbangal

ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்

ஆண்டவர் இயேசு என்னை கைவிடமாட்டார்... - 2

துன்பங்கள் துக்கங்கள் சுமந்தவர்

பாடுகள் பாவங்கள் சுமந்தவர்

என் முன்னே செல்லுகின்றார்... - 2

இவ் உலக பாடுகள்,

கொஞ்சக் காலம் மாத்திரமே,

அவ் உலக வாழ்வைக்கான,

காத்திருக்கிறேன்... - 2

அங்கே சென்றிடவே நான் ஆவல் கொண்டுள்ளேன்

அங்கே வாழ்ந்திடவே தேவன் கிருபை செய்திடுவார்

தூற்றியே திரியும் மாந்தருக்காய்

தேவனை நோக்கி துதிப்போமே

தீமைகள் செய்திடும் மாந்தரையும்

ஆசீர்வதித்து அணைப்போமே... - 2

கடவுளின் அன்பை அவர் காண செய்திடுவோம்

கடவுளின் பாதை காட்டி நாம் மகிழ்வோமே... - 2

நல்ல போராட்டம் போராடுவோம்

ஓட்டத்தை ஒழுங்காய் ஓடுவோம்

விசுவாசத்தை காத்துக்கொண்டு

ஜீவ கிரிடம் பெற்றுக் கொள்வோம்... - 2

நீதியுள்ள தேவன் நித்தமும் நடத்தியே

நித்திய வாழ்வுக்கு முத்திரை போடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு