ஆவியானவரே இந்நேரமே
வந்தசைவாடும் என் மீதிலே
ஆவியானவரே இந்நேரமே
வந்திடுமே எங்கள் மீதிலே - 2
பெந்தகோஸ்தின் நாட்களிலே
வந்தது போல் வந்திடுமே
அப்போஸ்தல நாட்களிலே
செய்தது போல் செய்திடுமே - 2
நவமான பாஷைகளை
பேசிடவே வந்திடுமே
வரங்களினால் நிறைந்திடவே
வல்லமையால் வந்திடுமே - 2
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாய் ஆனவரே
மீட்கப்படும் நாளுக்கென்று
அச்சாரமாய் ஆனவரே - 2