துதிப் பாடல்கள்

ஆவியான தேவனே அன்புள்ள தேவனே

Aaviyaana Devanae Anbulla Devanae

ஆவியான தேவனே அன்புள்ள தேவனே

என் மேலே இறங்கிடுமே

என்னோடு தங்கிடுமே

உம் இரத்தத்தால் பரிசுத்த இரத்தத்தால்

என்னை கழுவி விடும் (2)

ஈசோப்பினால் சுத்திகரித்துவிடும்

உம் சாயலாக என்னை மாற்றிவிடும்

1. உலகில் பாவம் பெருகுதையா

ஆயுசு நாட்களும் குறையுதையா

அக்கிரமம் மிகுதியாவதினால்

அன்பும் தணிந்து போகுதையா

2. உம் பிள்ளையாய் என்னை மாற்றுமையா

மறுரூபமாக என்னை ஆக்குமையா

மகிமையில் கொண்டுபோய் சேர்க்கும்வரை

மறைவிடத்தில் காத்துக் கொள்ளுமையா

3. எப்போது மீண்டும் வருவீரையா

என்றே என் இதயம் ஏங்குதையா

வருகையின் நாளது வரும் வரையில்

உம் சாயலால் திருப்தியாய் வாழ்வேனையா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு