ஆச எனக்கொரு ஆச - 2
என் ஆச நிறைவேறுமா இயேசு ராஜா அருள் கிடைக்குமா ?
கடல்மேலே பறந்து சென்று காற்றையும் , கடலையும் அடக்கிடணும்
கடுகளவு நம்பிக்கைகொண்டு மலைகளையே நான் புரட்டிடணும்
ஐந்து அப்பம் இரண்டு மீன்களை ஜெபித்து பத்தாயிரம் பேருக்கு பங்கிடனும்
இயேசு ராஜா செய்ததைக் காட்டிலும் - பெரிய
அற்புதங்கள் செய்து காட்டணும்
வாஜ்பாயும் அத்வானியும் அல்லேலூயா என்று முழங்கிடணும்
செல்வி ஜெயலலிதா இரட்சிக்கப்பட்டு
ஆவியில் நிறைந்தே ஜெபித்திடணும்
வாஜ்பாயும் , செல்வி ஜெயலலிதா
எழுந்து நின்று ஜெபமே ஜெயம் என்று பாடிடணும்
டாக்டர் கலைஞர் டான்ஸ் ஆடணும் - அதுக்கு
மு . க . ஸ்டாலின் தாளம் போடணும்
பால்தாக்கரே பைபிள் படிக்கணும்
காஞ்சி சங்கராச்சாரியார் பிரசங்கம் பண்ணணும் !
டாக்டர் தினகரன் போல் பிரகாசித்து
கர்த்தருக்கு மகிமைகொண்டு வரணும் - 2
அண்ணன் மோகன் சி யைபோல் தீர்க்கதரிசனம் சொல்லி
ஆத்துமாக்களை நான் கொள்ளையிடணும்
ஃபாதர் போல பாட்டுபாடியே
இந்த பார் முழுதும் கலக்கிக் காட்டணும்
இயேசு மட்டும் தெய்வம் என்பதை - இந்த
உலகத்துக்கு நிரூபித்துக்காட்டணும்