துதிப் பாடல்கள்

ஆண்டவரே இயேசுவே

Aandavarae Yesuvae

ஆண்டவரே இயேசுவே

அண்டிவந்தேன் உம்மையே

அடைக்கலம் நீர் தானையா

ஆறுதலும் நீர் தானையா... - 2

நீர் எனக்கு அடைக்கலமாய் இருப்பதனாலே

இக்கட்டுக்கு விலக்கி என்னை காத்துக்கொள்வீர்... - 2

இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ வைத்தவரே... - 2

என்றும் உம்மை பாடி துதிப்பேன் (ஆண்டவரே இயேசுவே...)

நீர் எனக்கு போதகராய் இருப்பதனாலே

நான் நடக்கும் வழியை எனக்கு காட்டுவீர்... - 2

என்மீது உந்தன் கண்ணை என்றுமே நீர் வைத்து... - 2

ஆலோசனை சொல்லுவீர் (ஆண்டவரே இயேசுவே...)

வலதுபுறம் இடதுபுறம் சாய்ந்து நான் போவதனாலே

வழியிதுவே இதிலே நடவென்று சொல்லுவீர்... - 2

உமது இனிய குரலைக் கேட்டு எனதுசெவியைசாய்த்துக்கொண்டு

உமது வழியில் நடப்பேனையா (ஆண்டவரே இயேசுவே...)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு