துதிப் பாடல்கள்

ஆனந்தம் கொள்வோம்

Aanandham Kolvom

ஆனந்தம் கொள்வோம் அகமகிழ்ந்திடுவோம்

ஆர்ப்பரித்திடுவோமே - ஆ! ஆ!

இயேசு கிறிஸ்து தாமே மூன்றாம்

நாள் உயிர்த்தெழுந்தாரே - 2

அல்லேலூயா கீதம் பாடி - 2

ஆர்ப்பரித்திடுவோம் நாம் கூடி - 2

விண்ணவர் இயேசு மண்ணதில் வந்து

சாத்தானை வென்றனரே - ஆ! ஆ!

கல்வாரி மா மலை தனிலே

கஸ்தியடைந்ததினாலே - 2

மரணத்திற்கதிபன் பிசாசை - 2

அழித்தார் தம் மரணத்தினாலே - 2

மரணத்தை ஜெயித்து மகிபன் எழுந்தார்

மகிமை அடைந்தனரே - ஆ! ஆ!

பாதாளத்தை அவர் வென்றார்

வேதாளத்தை அவர் வென்றார் - 2

மரணத்தின் கூரதை ஒடித்தார் - 2

மானிடர்க்காகவே தானே - 2

பாவத்தின் பெலனாம் நியாயப்பிரமாணத்தை

நிறைவேற்றி முடித்தனரே - ஆ! ஆ!

ஜீவாதிபதியாம் இயேசு

ஜீவப்பிரமாணத்தை ஈந்து - 2

என்றென்றும் ஜீவனோடிருக்க - 2

நம்மையும் அழைத்தாரே இயேசு - 2

உயிர்த்த கிறிஸ்து மேலான நாமத்தை

வகித்துக் கொண்டதினால் ஆ! ஆ

அவர்திரு நாமத்தில் நாமே தினமும்

ஜெயங்கொள்வோமே - 2

ஜெயம் ஜெயம் என்று நாம் பாடி - 2

ஸ்தோத்திரிப்போம் ஒன்றாய்க் கூடி 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு