ஆனந்தம் ஆனந்தம் என்ன ஓர் ஆனந்தம்
ஜயா உம் சந்நிதியில் ஆனந்தமே
பேரின்பம் பேரின்பம் பொங்குது பேரின்பம்
உள்ளத்தில் பொங்குது பேரின்பமே-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
மேகம் மீதிலே இயேசு ராஜன் வேகமாய்
வரும் நாளுக்குத்தான் நான் இருக்கிறேன்-2
என்னை அழைத்திட மணவாளன் வரும்நாளிலே
கண்கள் பனித்திட கரம்பிடிக்க காத்திருக்கிறேன்-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
தேவ தூதரின் ஆரவாரத்தோடவே
இயேசு ராஜாவின் பரிவாரமே-2
எக்காள சத்தம் வானத்திலே தொனித்திடிதே
இக்காலத்திலே எந்தன் நெஞ்சம் இனித்திடுதே-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
யூத சிங்கமாம் திருப்பாதம் வெண்கலமாம்
வெண்மைச் சிவப்பான விடிவெள்ளியாம்-2
தலை தங்கநிறமயமான இயேசு வருகையில்
என் அங்கமெல்லாம் அடிபணிந்து வணங்கிடுதே-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
காலம் வந்ததே மணவாளன் மார்பினில்
இந்த மணவாட்டி சாய்ந்திருக்கிறேன்-2
என் தலை அவர் இடக்கரத்தின் கீழ் இருக்குமே
அவர் வலக்கரம் அடியேனை(அடியாளை) அணைத்திருக்குமே-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா