ஆடுவோம் பாடுவோம் ஆனந்தமாக
அன்பர் இயேசு சமூகத்தில் அன்பர் இயேசு -சமூகத்திலே
உண்மையோடு வாழ்வோம் எந்நாளுமே
உத்தமரின் சித்தத்தினாலே
1. காண்கின்ற தேவர் அவர்
காத்திடுவார் நம்மையே
கிருபைகள் பல அருளி
பாசமாக நடத்துவாரே (ஆடுவோம்)
2. விண்ணுலக தேவர் அவர்
வந்து நம்மைக் காப்பார்
ஊக்கமாக உன்ஜெபம் கேட்டு
உதவிகள் செய்திடுவார் (ஆடுவோம்)
3. உன்னதர் இயேசு நம்முடனே
நாள்தோறும் கூட வருவார்
நாள் எல்லாம் பாதுகாத்து
ஆறதல் அளித்திடுவார் (ஆடுவோம்)