ஆதரவின்றி அலைந்த எனக்கோ
ஆறுதல் நீர்தானைய்யா
அன்னையை போல என்றும் அரவணைத்து தாங்கும்
அன்பின் அருள்தானைய்யா
இனிமையின் உருவமே
இளமையின் துரிதமே
இகமதில் துணையாளரே
இரவும் பகலும் என்னை அயராமல் காத்தணைக்கும்
ஈசன் உம் உறவேண்டுமே
உம் புகழ் பாடிடுவேன் நான்
மறைவிடமே என் உறைவிடமே
மகத்துவமானவரே - உமக்கு
மங்களம் மங்களமே
பரம் பொருளே பரிசுத்தரே
பாவி என்னை மீட்டீரே
உம் நாமம் பாரெங்கும் பறைசாற்றுவேன்
நான் பாரதில் போற்றிடுவேன்
உன்னதரே உயர்ந்தவரே
உலகத்தின் விடிவெள்ளியே
இயேசுவே உமக்கே ஸ்தோத்திரமே