துதிப் பாடல்கள்

ஆதரை மீதினில் ஆறுதல்

Aadharai Meedhinil Aarudhal

ஆதரை மீதினில் ஆறுதல் இன்றி நான்

அலைந்தேன் வெகுநாள் பெரும் பாதகனாய் -2

அருகினில் வந்து உம் கரங்களால் அணைத்து - 2

அகற்றினீர் என் பாவம் அனைத்தும் உம் ரத்தத்தால் -2

1. அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன் - 2

என்றும் மாறா அன்பு யாரிடம் தானுண்டு

அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன்

என்றும் மாற அன்பு உம்மிடம் தானுண்டு

சேயினைக் காக்கும் தாயினும் நேசித்தீர் - 2

ஆயிரம் நாவிருந்தும் போதாது உம்மைப் பாட -2

2. என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர் -2

இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே

என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர்

இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே

வாக்களித்தவர் நீர் வாக்கு மாறாதவர் - 2

இதுவரை காத்தவர் இறுதிவரை காப்பீர் - 2

3. என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர் - 2

தம் திருமுகமே எம் பெரும் மறைவே

என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர்

தம் திருமுகமே எம் பெரும் மறைவே

திருவசனம் தந்து ஒளிமிகு பாதையில் - 2

அருள்தந்து நடத்திடும் அழைத்தவர் நீர் அல்லோ - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு