துதிப் பாடல்கள்

ஆதாரம் நீர்தானய்யா எங்களுக்கு

Aadhaaram Neerdhaanayyaa Engalukku

ஆதாரம் நீர்தானய்யா எங்களுக்கு ஆகாரம் நீர்தானய்யா

வேறேதும் வேண்டாமைய்யா எங்களுக்கு

நீர்போதும் இயேசு ஐயா

மழை தரும் முகிலது உந்தன் அடிமை

அந்த இயற்கையும் சிரிப்பது உந்தன் பெருமை

மரணங்கள் என்றதுமே நெஞ்சை அடைக்கும்

மன்னவர் பேரைச் சொல்ல வாழ்க்கை சிறக்கும்

கருணைக் கடல் அவர் கண்ணில் இரக்கம்

உள்ளவரை இந்த பூமி இருக்கும்

வானத்து வீதியில் வந்திருப்பதாரு

தேவன் வலம் வரும் நந்தவனத்தேரு

நம்பிக்கையை நெஞ்சில் கொண்டு நீங்கள் ஜெபித்தால்

நிச்சயம் கர்த்தர் வந்து பதில் கொடுப்பார்

எண்ணங்களில் தூய்மை கொண்டு சொல்லி அழைத்தால்

எப்பொழுதும் உன்னை ஏந்தி நடப்பார்

ஆயிரம் இருந்தென்ன அவர் ஒன்றே போதும்

ஆனந்தம் அது என்ன நித்திய சந்தோஷம்

பஞ்சங்களும் பட்டினியும் பாரம் கொடுத்தால்

பார்த்துப் பரிகசிக்கும் தேவன் இல்லையே

சுற்றங்களும் சூழ்நிலையும் சோகம் கொடுத்தால்

மீட்டு ரட்சிக்கும் தேவன் போல இல்லையே

தாயவள் அன்பு என்ன அது ஒன்றும் இல்லை

தூயவர் அன்புக்கென்றும் விலை ஒன்றும் இல்லை

சங்கடங்கள் தீர்க்கும் தேவ சந்நிதியிலே

சத்திய வசனத்தின் ஆறுதல் உண்டு

நித்திய மகிழ்ச்சி தரும் இயேசு நாமத்தில்

பட்ட துன்பத்திற்கெல்லாம் தேறுதல் உண்டு

காலங்கள் அதுஎன்ன கடந்திட்ட போதும்

காத்திருப்போம் இன்னும் எதுவந்த போதும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு