ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைப் பார்க்கிலும்
கர்த்தர் வேதம் எனக்கு நலம்
1. உம் வேதத்திலுள்ள அதிசயங்கள் - யான்
காணும்படி கண்கள் திறந்தீரே - உம்
வேதத்தை விட்டு விலகிடாமல் எப்போதும்
உம்மோடு ஒன்றாய் வாழ
2. கர்த்தரின் வேதம் என் மகிழ்ச்சியும் - அவர்
வசனம் எனக்கு வெளிச்சமும் என்
கால்களுக்கு நல்ல தீபமுமாகவே தானே
எப்போதும் இருக்கிறது
3. கர்த்தரின் வேதத்தை நேசிப்போர் - மிக
சமாதானமாகவே வாழ்கின்றனர் அவர்
வேதத்தின்படியே தான் நடக்கின்றவர்கள்
உத்தமமானவர்கள்
4. கர்த்தரின் வேதம் சத்தியம்- அவர்
வசனம் என்றும் நிலைத்திருக்கும் வானம்
பூமி யாவும் அழிந்து ஒழிந்து போகும்
கர்த்தர் வார்த்தை ஒழிவதில்லை
5. பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் - வேதம்
மிகவும் விரும்பப்படத்தக்கது - நல்ல
தேனிலும் தேன் கூட்டில் இருந்து ஒழுகும்
தெளி தேனிலும் இனியது
6. ஆத்துமாவை வேதம் உயிர்ப்பிக்கும் - இந்த
சரீரத்தையும் புதுப்பிக்கும் - கர்த்தரின்
சத்திய வேதத்தில் எவ்விதக் குறைவும்
எவ்விதக் கேடும் இல்லை
7. கர்த்தர் அருளிய புஸ்தகமே - இந்தப்
பரிசுத்த வேத புஸ்தகம் -மனு
மக்களின் மகிமையான மீட்புக்காகத்தானே
ஈவாகத் தேவன் ஈந்தார்