கிறிஸ்தவ பாடல்

பேசும் தெய்வம் நீர்

paesum Theyvam Neer

பேசும் தெய்வம் நீர்

பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

1. என்னைப் படைத்தவர் நீர்

என்னை வளர்த்தவர் நீர்

என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

2. என் பாரம் சுமப்பவர் நீர்

என் தாகம் தீர்ப்பவர் நீர்

என்னைப் போஷித்து என்னை உடுத்தி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

3. என் குடும்ப வைத்தியர் நீர்

ஏற்ற நல ஔஷதம் நீர்

எந்தன் வியாதி பெலவீனங்களில்

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

4. என்னை அழைத்தவர் நீர்

என்றும் நடத்திடுவீர்

என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

5. எனக்காய் வருபவர் நீர்

என் கண்ணீர் துடைப்பவர் நீர்

எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு