கிறிஸ்தவ பாடல்

உம் முகத்தின் ஒளியால்

Um mukaththin oliyaal

உம் முகத்தின் ஒளியால்

வெறுமை மறைந்ததே

உம் மகிமை படர்ந்து

ஜீவன் பிறந்ததே

ஒரு பொழுதும் விலகா

உம் கிருபை தொடர்ந்ததே

என்னுள் தங்கி

சமாதானம் அளித்ததே

முன் செல்லும் பிரசன்னமே

இளைப்பாறுதலில் என்னை அமர்த்துதே

என்னை ஏந்தும் பிரசன்னமே

உயரங்களில் என்னை நிறுத்ததே

முன் செல்லும் பிரசன்னமே

என்னை ஏந்தும் பிரசன்னமே

பணீம் பணீம் என்னில் நதியாய் பாயுதே

பணீம் பணீம் என்னை தூக்கி சுமக்குதே

பணீம் பணீம் என்னை சூழ்ந்துக்கொள்ளுதே

பணீம் பணீம் உம்மை போல மாற்றுதே

இயேசுவின் வழியாய் உம் முகத்தை பார்க்கின்றேன்

பார்த்து பார்த்து உம்மை போல ஆகிறேன்

திறந்த முகமாய் உம் மாட்சிமை காண்கின்றேன்

உம் சாயல் பெற்று (சாயலாக) மறுரூபம் அடைகிறேன்

உம் முகம் பிரகாசமே

உம் கண்கள் அக்கினி ஜுவாலையே (3)

அன்பின் அக்கினி ஜுவாலையே

கிருபையின் அக்கினி ஜுவாலையே

தேவ முகத்தின் பிரகாசமே

என் மேல் பலமாய் வீசுதே

தேவ மகிமையின் பிரசன்னமே

என்னுள் ஜீவனாய் பாயுதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு