கிறிஸ்தவ பாடல்

பாடுவோம் மகிழ்வோம்

paaduvom Makilvom

பாடுவோம் மகிழ்வோம்

கொண்டாடுவோம்

அப்பா சமூகத்தில் பாடி

மகிழ்ந்து கொண்டாடுவோம்

அக்கினி மதில் நீரே

ஆறுதல் மழை நீரே

இக்கட்டில் துணை நீரே

இருளில் வெளிச்சம் நீரே

நன்றி நன்றி நன்றி – 2

துயர் நீக்கும் மருத்துவரே

என் துதிக்கு பாத்திரரே

பெலனெல்லாம் நீர்தானையா

பிரியமும் நீர்தானையா -என்

கல்வாரி சிலுவையினால் -என்

சாபங்கள் உடைந்ததையா

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் -இந்த

அடிமைக்குக் கிடைத்ததையா

இயேசுவே உம் இரத்தத்தால்

என்னை நீதிமானாய் மாற்றினீரே

பரிசுத்த ஆவி தந்து – உம்

அன்பை ஊற்றினீரே

பேரின்ப நீரோடையில்

என் தாகம் தணிப்பவரே

உமது பேரன்பு – அது

எத்தனை மேலானது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு