கிறிஸ்தவ பாடல்

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்

oru kannukum thayai

ஒரு கண்ணுக்கும்

தயை தோன்றாமல் இருந்தாலும்

ஒரு செவிகளும் என் புலம்பலை

கேட்காமல் இருந்தாலும் – 2

என் அழுகையின் சத்தம் கேட்கும்

தேவனே

என் நிலைமைகள் நன்றாக தெறியும்

இயேசுவே -2

நீர் என்னை கைவிட மாட்டீர்

புறக்கணிக்க மாட்டீர்

கஷ்ட நாட்களில் என்னோடு

கூட இருந்திடுவீர் -2

1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்

சோர்ந்து போனோர்க்கு பெலனை

கொடுக்கும் தேவன் – 2

இளைஞர்கள் இளைப்படைந்து

போனாலும்

வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2

நான் கர்த்தருக்கு காத்திருந்து

புதுபெலன் அடைந்து

கழுகை போல் சிறகடித்து

உயர்ந்திடுவேன். -2

2)கானான் நாட்டிலே

ஆசிர்வாதத்தால் என்னை

ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்

என் தேவன் -2

தம் வாக்குதத்தம் நினைவு

கூர்ந்திடும் தேவன்

தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2

உயர வைத்திடுவார்

என் பெயர் பெரிதாக்கிடுவார்

என் கண்களினால் அவர்

மகிமை கண்டிடுவேன் – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு