கிறிஸ்தவ பாடல்

நித்ய ஜீவன் எனக்குண்டு

nithiya jeevan enakkundu

1. நித்ய ஜீவன் எனக்குண்டு

நியாயத்தீர்ப்பினிலே;

என் பயம் எல்லாம் நீங்கிற்று,

விஸ்வாசித்தபோதே

பல்லவி

துன்பம் எல்லாம் சகிப்போம்

இன்னும் கொஞ்சக் காலந்தான்;

மோட்சம் போவோம் சீக்கிரத்தில்!

2. உலகம் என்னைப் பகைத்தால்

தைரியமாய் போர் செய்வேன்;

சோதனையெல்லாம் வெல்லுவேன்,

தேவ வல்லமையால் – துன்பம்

3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்

அவரை விட்டிடேனே

என் மீட்பரை நான் சந்திக்க

மோட்சம் நான் ஏகுவேன் – துன்பம்

4. உன் பாவத்தை நீ உணர்ந்து

பரமனண்டை வாராயோ;

உன் பாவம் அவர் போக்குவார்

பரிசுத்தமாக்குவார் – துன்பம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு