கிறிஸ்தவ பாடல்

என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை

En Aanndavaa ! Um Kara Valla Kiriyai

1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை

உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்;

விண்மீன்களும் பேரிடி முழக்கமும்

உம் வல்லமை எடுத்துரைக்குதே.

என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே!

நீர் வல்லவர் ! மா வல்லவர் !

போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா !

நீர் வல்லவர் ! மா வல்லவர் !

2. காடுகளின் பசும் மரங்கள் மீது

கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்;

உயர் மலை உன்னத காட்சி கண்டேன்,

தென்றல் காற்றும் தெளிநீரோடையும் — என்

3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும்

மரிக்கவே அனுப்பி வைத்தாரே;

சிலுவையில் என் பாவ பாரமேற்று

ரத்தம் சிந்தி பாவ பலியானார் — என்

4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு

என்னைச் சேர்க்க இயேசு வருவாரே

உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும்

வல்லவரை வணங்கித் தொழுவேன் — என்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு