கிறிஸ்தவ பாடல்

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

neer seitha athisayam

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

விவரிக்க முடியாதைய்யா

நீர் செய்த நன்மைகள்

எண்ணிலடங்காமல்

உள்ளமே பொங்குதைய்யா

வெறுமை நிறைந்த என் வாழ்வினையே

ஒளிமயமாக்கின ஒருவர் நீரே

சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை

உயரங்களில் ஏற்றி வைப்பவரே

ஜோதிகளின் தெய்வமே

எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே

எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்

பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்

ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்

மனிதர்கள் பதறினாலும்

தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்

நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்

இஸ்ரவேலின் தேவன் நம்முடனே

யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு