கிறிஸ்தவ பாடல்

நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }

nantiyaal Ponguthae Emathullam }

நன்றியால் பொங்குதே எமதுள்ளம் }

நாதன் செய் பல நன்மைகட்காய் } 2

நாள் தோறும் நலமுடன் காத்தனரே

நன்றியால் தோத்தரிப்போம் -- அல்லேலூயா

நன்றியால் தோத்தரிப்போம் -- நன்றியால்

1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே }

கண்மணி போல் நம்மை காத்தனரே } 2

கண்ணீர் கவலைகளை மாற்றினாரே

கணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா

கணிவுடன் தோத்தரிப்போம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து }

ஜீவிய பாதையில் நடத்தினாரே } 2

ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்

ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை

3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே }

அதிசயங்கள் பல புரிந்தனரே } 2

ஆயிரம் நாவுகள் தான் போதுமோ

ஆண்டவரை போற்ற – அல்லேலூயா

ஆண்டவரை போற்ற

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு