கிறிஸ்தவ பாடல்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

naan Unnaivittu Vilakuvathillai

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை

நான் உன்னைக் காண்கின்ற தேவன்

கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

1. பயப்படாதே நீ மனமே – நான்

காத்திடுவேன் உன்னை தினமே

அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்

நான் நடத்திடுவேன்

2. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்

அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்

அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்

ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

3. நீதியின் வலக்கரத்தாலே – உன்னை

தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்

உண்மையாய் ஜெபித்திடுவாய் – தினம்

அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு