கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே
2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே
3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே
4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே
5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா – கூடுமே
6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே
7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டிகிறீர்
கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர் – கூடுமே
8. பகலை ஆள்வதற்க்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்க்கு விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே