கிறிஸ்தவ பாடல்

கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்

kirupai Emmaich Soolnthu Kollum - Tham

கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் – தம்

கிருபை கர்த்தரில் மகிழ்வோம்

களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை

1. யோர்தானைக் கடந்துவந்தோம்- எங்கள்

இயேசுவின் பெலம் அடைந்தோம்

சேனையின் கர்த்தர் முன்னேநடந்தார்

சோர்வின்றி காத்துக் கொண்டார்

2. தேசமே பயப்படாதே – எங்கள்

தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின்

நன்மை சேமம் அருள்வார்

தாசர்கள் வேண்டிடுவோம்

3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்

காரியம் செய்திடுவார்

கால் வைக்கும் தேசம்

இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம்

4. ஆண்டுகள் நன்மையினால் – முடி

சூண்டு வளம் பெருக

தேசத்தின் மீதே கண்களை வைத்தே

பாசமாய் நோக்கிடுவார்

5. ஜாதி ஜனங்களையும் – வந்து மோதி அசைத்திடுவார்

காத்துக் கிடக்கும் உள்ளம்

மகிழும் கர்த்தரே வந்திடுவார்

தூய கற்புள்ள தேவ சபையாய் விரம் சேர்ந்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு