கிறிஸ்தவ பாடல்

பாடித் துதி மனமே

Paatith Thuthi Manamae

பாடித் துதி மனமே

பரனைக் கொண்டாடித் துதி தினமே.

நீடித்த காலமதாகப் பரன் எமை

நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி

1. தீர்க்ககதரிசிகளைக் கொண்டு முன்னுறச்

செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்

மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு

விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் - பாடி

2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்

தொலையில் கிடந்த புறசாதியாம் எமை

மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை

மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் - பாடி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு