கிறிஸ்தவ பாடல்

பரிசுத்த ஆவியே வாருமையா

Parisuththa Aaviyae Vaarumaiyaa

பரிசுத்த ஆவியே வாருமையா

பரலோக பலத்தால் நிரப்புமையா - 2

1. அனுதின வாழ்வில் பரிசுத்தனாக

விளங்கிட எந்தனுக்குதவுமையா - 2

அனலாவியாலே அடியேனை நிரப்பி

அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா - 2 பரிசுத்த

2. உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு

உயர்வான இலட்சியம் தாருமையா

உலகினை மறந்து உந்தனை நோக்கி

அனுதினம் ஓடிட உதவுமையா - பரிசுத்த

3. சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை

சத்துவத்தால் என்னை நிரப்புமையா

சதியான யோசனை தவறான சிந்தனை

இவைகளுக்கு என்னை விலக்குமையா - பரிசுத்த

4. பாரத தேசம் உந்தனைக் காண

பரந்ததோர் தரிசனம் தாருமையா

பரலோக தேசத்தை பாரத புதல்வர்

சுதந்திரமாக்கிட உதவுமையா - பரிசுத்த

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு