கிறிஸ்தவ பாடல்

நீரன்றி வாழ்வேது இறைவா!

Neeranri Vaazhvaethu Iraivaa!

நீரே என் வாழ்வு!

நீரன்றி வாழ்வேது இறைவா!

உம் நினைவின்றி மகிழ்வேது தேவா

உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போது

உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் - நீரண்றி

1. பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது

இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்

ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே - 2

உம் வார்த்தையில் உண்டு அற்புதமே - நீரன்றி

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்

அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்

உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா

உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா - நீரின்றி

3. எத்தனை நன்மைகள் செய்தீரய்யா - அதில்

எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா

அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்

ஆயிரம் நாவுகள் போதாதய்யா - நீரின்றி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு