கிறிஸ்தவ பாடல்

நன்றியால் பாடிடுவோம்

Nanriyaal Paatituvoem

நன்றியால் பாடிடுவோம்

நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே

1. செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே

தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் - நன்றி

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை

மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் - நன்றி

3. உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை - உடன் சுதந்தரராய் இருக்க

கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க - நன்றி

4. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் - சீக்கிரம் வருவார்

சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே - நன்றி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு