கிறிஸ்தவ பாடல்

திரி முதல் கிருபாசனனே

Thiri Muthal Kirupaasananae

இயேசுவே உம் திருவடி சரணம்

1. திரி முதல் கிருபாசனனே சரணம்!

ஜெக தல ரட்சக தேவா சரணம்!

தினம் அனுதினம் சரணம் - கடாட்சி

தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

2. நலம் வளர் ஏக திரித்துவா - சரணம்

நமஸ்கரி உம்பர்கள் நாதா - சரணம்

நம்பினேன் இது தருணம் - தருணம்

நம்பினேன் தினம் சரணம் - சருவேசா!

3. அருவுருவே அருளரசே சரணம்!

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!

அதிகுணனே தருணம் - கிரணமொளிர்

அருள் வடிவே சரணம் - சருவேசா!

4. உலகிட மேவிய உனதா சரணம்

ஓர் கிருபாசன ஒளியே சரணம்!

ஒளி அருள்வாய் தருணம் - மனுவோர்க்கு

உத்தமனே சரணம் - சருவேசா!

5. நித்திய தோத்திர நிமலா சரணம்!

நிதி இஸ்ரவேலரின் அதிபதி சரணம்!

நீதா இது தருணம் - கிருபைக்கொரு

ஆதாரா சரணம் - சருவேசா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு