கிறிஸ்தவ பாடல்

சொன்னதைச் செய்பவரே!

Sonnathais Seypavarae!

இயேசு என் நம்பிக்கை

சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!

இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் - 2

1. திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர்

மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்

உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே

என்றென்றும் ஆனந்தமே - என்றும்

ஆனந்தம் ஆனந்தமே!

2. மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்

தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்

எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்

முற்றிலும் ஜெயம் கொள்ளவே - நாங்கள்

முற்றிலும் ஜெயம் கொள்ளவே!

3. பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்

ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்

துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்

தேசத்தை சுதந்தரிப்போம் - நாம்

தேசத்தை சுதந்தரிப்போம்!

4. இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்

பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்

இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார்

இயேசுவே தேவன் என்பார் - என்றும்

இயேசுவே தேவன் என்பார்!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு