கிறிஸ்தவ பாடல்

சத்திய தேவனின் பூரண வாழ்வை

Saththiya Thaevanin Puurana Vaazhvai

பூரணவாழ்வு தாரும்

சத்திய தேவனின் பூரண வாழ்வை

அனுபவமாய் நான் பெறவேண்டும் - 2

1. தேவனே என்னை போதித்து நடத்தும்

தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்

உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க

இயேசுவை நோக்கித் தொடர உதவும் - 2

2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்

துணிந்து நின்ற யோபுவைப்போல

அனைத்து வளமும் அகன்று போனாலும்

ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் - 2

3. கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட

இலட்சிய வீரர் பவுலினைப் போல

இறுதிநாள் வரை உண்மையாயிருந்து

அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு