கிறிஸ்தவ பாடல்

சத்தம் கேட்டு சித்தம் செய்ய

Saththam Kaettu Siththam Seyya

இயேசு அழைக்கிறார்

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே

சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ- ஆ- ஆ

கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்

வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே - 2

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ

கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே

கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்

கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும்

2. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ

உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினின்றும்

விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்

உப்பைப்போல கரைந்திடுவோம்

மெழுகைப்போல உருகிடுவோம்

3. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ

தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே

குஜராத்ää பீஹார் இமயத்தில் ஏராளம் ஏராளமே

இராஜஸ்தான் காஷ்மீர் ஒரிஸாவில்

நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்?

4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ

வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மைக் காணிக்கையாக்கிடுவோம்

உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்

தேசம் இயேசுவைக் கண்டுவிடும்

சபைகள் ஏராளம் பெருகிவிடும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு