கிறிஸ்தவ பாடல்

உத்தமமாய் வாழ்வேன்

Uththamamaay Vaazhvaen

உத்தமமாய் வாழ்வேன்

கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்

அநேகத்திற் கதிகாரியாய்

மாற்றுவேன் என்ற என் நேசரே

நீர் என்னையும் மாற்றிடுமே

1. வாழ்வில் நேரும் போராட்டங்கள்

தாக்கும் பல துன்பங்கள் - 2

அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே

உன்னத பெலன் தாருமே

2. சோர்பிலாது ஜெபித்திட

சலிப்பில்லாது உழைத்திட - 2

உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே

உன்னத பெலன் தாருமே

3. மரணம் என்னை சந்திக்கும்

நாள் வரையும் உண்மையாய்

உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே

உன்னத கிருபை தாருமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு