கிறிஸ்தவ பாடல்

கீதங்கள் பாடியே போற்றிடுவோம்

Keethankal Paatiyae Poerrituvoem

பாடி போற்றுவோம்

1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - சங்

கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - 2

கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!

அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் - 2

அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்

மகிமை படுத்திடுவோம்

யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்

உயர்த்தி மகிழ்ந்திடுவோம்

அல்லேலூயா - 8

2. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்

கேடகமும் கிருபையும் பெலனுமானார்

மாராவை மதுரமாக்கினார்

மாறாத பரிகாரி அவரேயாவார் - 2

3. நீதியின் தேவனை உயர்த்திடுவோம்

நித்திய பாதையில் நடத்திடுவோம்

நிதம் மாறாத அவர் அன்பினை நாம்

சிதறி எங்குமே கூறிடுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு