கிறிஸ்தவ பாடல்

காலம் வேகமாய் ஓடுதே

Kaalam Vaekamaay Ootuthae

காலம் வேகமாய் ஓடுதே

கருத்தில்லாமல் வாழ்கின்றேன்

கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட

உதவி செய்யும் தேவா! - எனக்கு

உணர்வு தாரும் தேவா

1. உள்ளத்தில் மாற்றம் தேவை - எனக்கு

வெளி வேஷம் என்றும் வேண்டாம்

மறுரூப வாழ்வைத் தந்து என்னை

குணவானாய் மாற்றிவிடும்

2. கல்வாரிக் காட்சி கண்டேன் - அந்த

காயங்கள் என்னால் என்றேன்

அன்பின் ஆழம் கண்டு - அந்த

அன்புக்கு அடிமை என்றேன்

3. கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு

ஜெபத்தின் ஆவி தாரும்

கிருபையின் காலம் இப்போதும்

இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு